சென்னிமலையில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்


சென்னிமலையில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
x

சென்னிமலையில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமை தாங்கினார். தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் (சென்னிமலை மேற்கு), சி.பிரபு (சென்னிமலை கிழக்கு), பேரூர் செயலாளர் எஸ்.எம்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் முழு உடல் பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் (அட்டவணை பிடாரியூர்), கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் கோபிநாதசாமி லட்சுமி தாயார் கோவில் (புன்செய் பாலதொழுவு), கொடுப்பதியம்மன் கோவில் (பூச்சக்காட்டுவலசு) ஆகிய கோவில்களை சார்ந்த பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன் மற்றும் சென்னிமலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள், இதயம் காப்போம் டிரஸ்ட் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story