6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x
தினத்தந்தி 7 July 2023 6:00 PM IST (Updated: 9 July 2023 4:22 PM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

திருப்பூர்

தளி

திருமணத்தை ஆதி திராவிடர் நலத்துறைஅமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.

இலவச திருமணம்

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோவில் மூலமாக இலவச திருமணம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடி மணமக்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு அட்சதை மற்றும் மலர்கள் தூவி வாழ்த்தினர்.

அதன்பின்னர் உடுமலை லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் சீர்வரிசை பொருட்களையும் மணமக்களுக்கு தனித்தனியாக வழங்கினார். அதன்படி சீர்வரிசை பொருட்களாக மாங்கல்யம் நான்கு கிராம், மணமக்கள் ஆடை, மணமக்கள் விட்டார்கள் 20 நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, பாய் மிக்சி தலா ஒன்று, தலா இரண்டு தலையணை மற்றும் கை கெடிகாரம், பூஜை பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை மணமக்களுக்கு சீதனமாக வழங்கப்பட்டது.


Next Story