இலவச வீட்டு மனைப்பட்டா


இலவச வீட்டு மனைப்பட்டா
x

இலவச வீட்டு மனைப்பட்டாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

விருதுநகர்


இலவச வீட்டு மனைப்பட்டாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

வீட்டுமனைப்பட்டா

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 21 திருநங்கைகளுக்கும், 27 சிறுபான்மை குடும்பத்தினருக்கும் ரூ.16 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற் போல சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி சமூகத்தில் நலிந்த பிரிவினரை பாதுகாத்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

நலத்திட்ட உதவிகள்

அந்த வகையில் 21 திருநங்கைகளுக்கும், 27 சிறுபான்மை குடும்பத்தினருக்கும் மொத்தம் ரூ.16 லட்சத்து 792 மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு குடும்ப அட்டை, குடியிருக்க வீடுகள், உதவித்தொகை, இலவச பஸ் பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சருக்கு நன்றி

மேலும் திருநங்கைகள் சுய தொழில் புரிவதற்காக தையல் எந்திரங்கள், ஆடுகள், கறவை மாடுகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குடியிருப்புகள், மின்சார வசதி வழங்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சருக்கு திருநங்கைகளும், சிறுபான்மை குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.

இந்தநிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி., சீனிவாசன் எம். எல்.ஏ., விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், ஆர்.டி.ஓ.க்கள் விஸ்வநாதன் (சிவகாசி), அனிதா (சாத்தூர்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story