இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், பிரானுார் பார்டர் மர வியாபாரிகள், சாமில் உரிமையாளா்கள் சங்கம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி தொழிலதிபர் படேல் குரூப்ஸ் அம்ரூத் படேல் மோகன் தலைமை தாங்கினார். பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் முருகன், மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ராஜன், தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய மாநில செயலாளா் மணிமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி வரவேற்றார். கேந்திர பொறுப்பாளா் கண்ணன் இறைவணக்கம் பாடினார். அதனை தொடா்ந்து ரமிளாமோகன், சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி காஞ்சனா பிரவீன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினா். கேந்திர அன்பர்கள் கல்யாணக்குமார், கோமதிநாயகம், பேச்சிமுத்து, நூலகர் ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

முகாமில் அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவா்கள் மற்றும் குழுவினா் கண் பரிசோதனை சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். முகாமில் மொத்தம் சுமார் 230பேர் கலந்து கொண்டனா். இதில் 40 போ் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 72 பேருக்கு மருந்து வழங்கப்பட்டது. 42 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், கேந்திர தொண்டா்கள், சுபம் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்க அலுவலக மேலாளா் கோபக்குமார், சிவக்குமார், முத்துமாரியப்பன், சத்யபாமா சமூக ஆர்வலா்கள் செய்திருந்தனா்.


Next Story