இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பவுண்டேஷன், அரவிந் கண் மருத்துவனை இணைந்து பாவூர்சத்திரத்திரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பவுன்டேஷன் தூத்துக்குடி நிர்வாக அலுவலர் சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர் சவுந்திர பாண்டியன், ராஜாஸ் நிறுவனங்கள் உரிமையாளர் ஜோசப் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் தெஹி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 50 பேர் அறுவை சிகிச்சைக்காக நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பாவூர்சத்திரம் கிளை மேலாளர் தினேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story