இலவச கண் பரிசோதனை முகாம்


இலவச கண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:30 AM IST (Updated: 28 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கரூர் அரசன் கண் மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் சித்தா பிரிவு ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம், திண்டுக்கல் கக்கன் நகர் பாரதி விடுதியில் நடந்தது. இதற்கு மாவட்ட சமூகநல அலுவலர் புஷ்பகலா தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் (ஓய்வு) அப்துல் பாரி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் முகமது சலீம் வரவேற்றார்.

முகாமில் டாக்டர் தாரணி தலைமையில் கண் பரிசோதனை மற்றும் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களில் 35 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story