சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி


சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கு 18 வயது முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்தவர்களும், நடப்பாண்டில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நேரிடையாகவும் நடைபெறும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றபின், நேர்காணல், குழு விவாதம், எழுத்து தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story