போலீஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்


போலீஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
x

போலீஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூரில் நாளை தொடங்குகிறது.

அரியலூர்

மத்திய-மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலை காவலர் (காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் சிறைத்துறை) மற்றும் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) முதல் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டைநகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story