மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்


மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM (Updated: 14 Oct 2023 6:46 PM)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பனவடலிசத்திரம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி யேசுதாஸ் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் கிளை செயலாளர் எஸ்பி.முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீரகுமார், ஒன்றிய பிரதிநிதி சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குட்டிராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story