அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 343 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
குன்றத்தூர் நகராட்சியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம்
இதில் சிறு, குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 343 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் மண்டல அளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கபடி போட்டியை சமாதான புறாக்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார். அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட குழுத்தலைவர் மனோகரன், குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு ஏகனாபுரம் பகுதியில் குடியிருப்புகளோடு சேர்ந்து நிலம் எடுப்பதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அமைச்சரிடம் குடியிருப்புகள் பாதிக்காத வகையில் நிலங்களை எடுப்பதற்கு மனுக்கள் அளித்தனர்.
Related Tags :
Next Story