எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை


எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை
x

எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

தொழில் நிறுவனங்கள், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேல்ட் சிட்டி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மகேந்திரா வேர்லட் சிட்டி சீனியர் பொது மேலாளர் சுனில் குரியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரியின் மருத்துவ சேவைகள் பற்றி தலைமை இயக்குதல் அலுவலர் டாக்டர் வி.பி. சந்திரசேகர் விளக்கி பேசினார்.

இதில் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் கூடுதல் பதிவாளர் மைதிலி, தொடர்பு துறை இயக்குனர் நந்தகுமார், மகேந்திரா வேர்லட் சிட்டி பொது மேலாளர் தர்மேந்திரா, எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story