தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி - 2 பேர் கைது


தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி - 2 பேர் கைது
x

சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதாக கூறி 'எம்.எஸ்.அசோசியேட்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீதரன், 'காளியப்பா பிக்சர்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த குமார் காளையன் ஆகியோர் வங்கி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.4½ கோடி பணம் பெற்றுள்ளனர். ஆனால் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்யாமல் அந்த நிறுவனத்தை ஏமாற்றி உள்ளனர்.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான் விக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் மோசடி நபர்களான திருவான்மியூரை சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 60), திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த குமார் காளையன் (56) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story