வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சம் மோசடி; பெண் கைது

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சம் மோசடி; பெண் கைது
x

கடையநல்லூர் அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடன் வாங்கி தருவதாக...

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சங்கரன் மகன் பேச்சிமுத்து (வயது 30). இவர் புன்னையா புரத்தில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம், பாவூர்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த மணி மகள் ஜோஸ்டின் பொன்னேசம் என்பவர் வங்கியில் ரூ.30 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கு கமிஷனாக இரண்டு தவணையாக முதலில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரமும், பின்னர் ரூ.2 லட்சத்து 48 ஆயிரமும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் பெற்றுள்ளார்.

கைது

ஆனால் வங்கியில் இருந்து கடன் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பேச்சிமுத்து சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி வழக்குப்பதிவு செய்து ஜோஸ்டின் பொன்னேசத்தை கைது செய்தார்.

Next Story