போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: வக்கீலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு


போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: வக்கீலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு
x

சென்னையில் வக்கீலுக்கு சொந்தமானரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை,

சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். வக்கீல் ஆவார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கோடம்பாக்கம் வாசுதேவன் நகரில் தனக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான இடத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது இடத்தை மீட்டுத்தர வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆரோக்கியம், உதவி கமிஷனர் ராஜ்பால் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பெமிலா ஷெர்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் வக்கீல் சந்திரசேகரனின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 58), அடையாறை சேர்ந்த பாஸ்கர் (56), குன்றத்தூரை சேர்ந்த சுரேஷ் (38), குரோம்பேட்டையை சேர்ந்த மனோகரன் (56), கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (58) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story