ரூ.50.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.50.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 11 Jun 2023 12:30 AM IST (Updated: 11 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் ரூ.50.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் மேலகடையநல்லூரில் சமுதாய நலக்கூடத்தில் பல்நோக்கு கட்டிடம் மின் மோட்டார் உடன் கூடிய ஆழ்துளை கிணறு, நன்மை கூடம், ரேஷன் கடை மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் 2 ரேஷன் கடைகள் ஆகியவை மொத்தம் ரூ.50.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மூர்த்தி, கழக துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், நகர செயலாளர் முருகன், வார்டு கவுன்சிலர் சுபா ராஜேந்திர பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story