ரூ.25 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.25 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 15 Sept 2023 12:30 AM IST (Updated: 15 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருமலையப்பபுரம் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் ஊராட்சியில் ரூ.10.96 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம், ரூ.14.31 லட்சம் மதிப்பில் புதிய ஊருணி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கடையம் ஆணையாளர் திருமலை முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற துணை தலைவர் சுரேஷ் வரவேற்றார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், சேர்வைக்காரன்பட்டி ரவிச்சந்திரன், பொட்டல்புதூர் கணேசன், ஏபிநாடானூர் அழகுதுரை, வீரா சமுத்திரம் ஜீனத் பர்வீன் யாக்கூப், ரவணசமுத்திரம் முகமது உசேன், கீழாம்பூர் மாரிசுப்பு, பாப்பான்குளம் முருகன், தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, மந்தியூர் கல்யாண சுந்தரம், முதலியார்பட்டி மைதீன் பீவி அசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வார்டு உறுப்பினர் ராமலட்சுமி, மக்கள் நல பணியாளர் மங்கையர்கரசி, பணித்தள பொறுப்பாளர் சண்முகராதா, ஓ.எச்.டி. ஆபரேட்டர் இசக்கி, ஆபரேட்டர் சினேகா, அங்கன்வாடி பணியாளர்கள் ராஜேஸ்வரி, பேச்சியம்மாள், ரேஷன் கடை பணியாளர்கள் ராமமூர்த்தி, சுகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலாளர் அன்னகிருஷ்ணன் நன்றி கூறினார்.



Next Story