மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா
நாங்குநேரி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி அருகே வாகைக்குளத்தில் யூனியன் தலைவர் சவுமியா எட்வின் ஒன்றிய நிதியில் இருந்து புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழாவும், ரூ.10 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர். புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினர்.
விழாவில் பஞ்சாயத்து தலைவர் வெற்றிவேல் செல்வி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், ஜெபக்கனி செந்தில்ராஜ், இளைஞரணி நிர்வாகிகள் சேர்மப்பாண்டி, மாயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story