ரூ.20 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
கடையம் அருகே ரூ.20 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தென்காசி
கடையம்:
கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து கேளையாபிள்ளையூரில் ரூ.20 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். விழாவில் ஓ.பன்னீர் செல்வம் அணி அமைப்புச்செயலாளர் எஸ்.ராதா, மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, மாவட்ட பொருளாளர் நூர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் விஜய், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story