ரூ.1½ கோடியில் பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.1½ கோடியில் பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 22 Sept 2023 12:30 AM IST (Updated: 22 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை பகுதியில் ரூ.1½ கோடியில் பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகராட்சிக்குட்பட்ட இலந்தைகுளம் குறுக்கே பாலம் கட்ட ரூ.74 லட்சம், குலையநேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரட்டைகுளம் மறுகாலில் தடுப்பு சுவர் அமைத்து பாலம் கட்ட ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடந்தது.

சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், நகராட்சி துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், இரட்டை குளம் ஊர் தலைவர்கள் கணபதி நாடார், சிவராஜ கோபால் தேவர், குலையநேரி ஊராட்சி மன்ற தலைவர் சீதா லட்சுமி பாலமுருகன், சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் நிர்வாக கமிட்டியினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பழனிநாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார்கள்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story