கடன் வழங்குவதில் முறைகேடு; மயிலாடும்பாறை கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


கடன் வழங்குவதில் முறைகேடு; மயிலாடும்பாறை கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x

கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தேனி

கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டம்

மயிலாடும்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் முத்தாலம்பாறை, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக கூறி கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஊழியர்களிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் மற்றும் போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் மற்றும் கறவை மாடுகளுக்கு கடன்கள் கேட்டு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் வங்கி ஊழியர்கள் தேவையற்ற ஆவணங்களை கேட்டு விவசாயிகளை அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.

முறைகேடு

மேலும் குறிப்பிட்ட சதவீத பணம் கொடுக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து முறைகேடாக பயிர்க்கடன் வழங்குகின்றனர். எனவே விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் பளளாகுபாடு இன்றி கடன்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர் விவசாயிகளின் புகார் குறித்து கூட்டுறவு சங்க மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story