அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை - எடப்பாடி பழனிசாமி


அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 8 July 2022 10:29 AM IST (Updated: 8 July 2022 11:26 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜுன் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

அதிமுகவை அரசியல் ரீதியாக, நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Next Story