பட்டாசு கடைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு


பட்டாசு கடைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு
x

பட்டாசு கடைகளை கண்காணிக்க சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தகவல் தெரிவித்துள்ளார்.

அரியலூர்

தடையின்மை சான்று

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் காலை நடந்த வெடிவிபத்தில் 11 பேர் பலியாகினர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி அலகு மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் உள்பட பட்டாசு விற்பனை கடைகள் நடத்திட வெடிபொருள் சட்டத்தின்படி, தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகாப்புத்துறையின் தடையின்மை சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும். மேலும், உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி இருப்பு வைத்துக்கொள்ளவும் மற்றும் அனைத்து பாதுகாப்புகள் குறித்த நடவடிக்கைகளையும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

உரிமதாரர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், உரிமம் இன்றி அல்லது புதுப்பிக்கப்படாமல் இதுபோன்று உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனை கடைகள் செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story