விவசாயிகள் மீது வனத்துறையினர் பொய் வழக்கு பதிவு - முத்தரசன் குற்றச்சாட்டு


விவசாயிகள் மீது வனத்துறையினர் பொய் வழக்கு பதிவு - முத்தரசன் குற்றச்சாட்டு
x

கரடி வேட்டையாடியதாக விவசாயிகள் மீது வனத்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழவடகரையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி மக்கள் வனவிலங்குகளாலும், வனத்துறையினராலும் பாதிக்கப்படுகின்றனர். வனவிலங்குகளால் விளைநிலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்காக உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத நிலையில், தவறுகளை மறைப்பதற்காக கீழவடகரை கிராம மக்கள் மீதும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பெரும்படையார், முருகன் உள்ளிட்டோர் மீதும் கரடியை வேட்டையாடியதாக வனத்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்து பழிவாங்கி வருகின்றனர். எனவே வனத்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நாகை எம்.பி. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story