மாமல்லபுரம் மீனவர்களுடன் படகில் சென்று கடலில் மீன்பிடித்து மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்


மாமல்லபுரம் மீனவர்களுடன் படகில் சென்று கடலில் மீன்பிடித்து மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்
x

மாமல்லபுரம் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் இருவர், மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று வலைவிரித்து மீன்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா

பிரான்ஸ் நாட்டில் உள்ள கடற்கரை நகரமான சாம்பிரிவ் நகரப்பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்டியான் (வயது 65), மிஷேல் (63). நண்பர்களான இருவரும் முதல், முறையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். இதில் கிருஷ்டியான் அங்கு சொந்தமாக மாட்டு பண்ணை வைத்துள்ளார். மிஷேல் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நண்பர்களான இருவரும் தங்கள் தொழில் நேரம் போக மற்ற நேரங்களில் அங்குள்ள அட்லாண்டிக் கடலில் படகில் மீன்பிடிக்க சென்று விடுவார்களாம். இவர்கள் இருவரும் கடந்த 30 வருடங்களாக மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். கிருஷ்டியான், மிஷேல் நண்பர்கள் தினமும் தங்கள் உணவு தேவைக்கு அங்குள்ள கடலில் தங்கள் சொந்த படகில் சென்று வலைவிரித்து மீன்பிடித்து வருவார்களாம்.

கடலில் மீன்பிடித்தனர்

இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள வங்காள விரிகுடா கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்று மாமல்லபுரம் சுற்றுலா வந்த கிருஷ்டியான், மிஷேல் நண்பர்கள் மாமல்லபுரம் மீனவர்கள் சீனிவாசன், பசுபதி ஆகியோரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் படகில் பிரான்சு மீன்பிடிக்காரர்கள் இருவரையும் கடலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் கடலில் மீன்பிடித்து மாமல்லபுரம் மீனவர்களுடன் இருவரும் மகிழ்ச்சியாக கரைக்கு திரும்பினர். மாமல்லபுரம் கடலுக்கு சென்று தங்கள் கைகளால் வலைவிரித்து பிடித்து வந்த ருசி மீன்களை அங்குள்ள உணவகத்தில் கொடுத்து வறுவல் செய்து கிருஷ்டியான், மிஷேல் நண்பர்கள் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story