2022-ம் ஆண்டிற்கானதொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்அதிகாரி தகவல்


2022-ம் ஆண்டிற்கானதொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5-ம் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ஆக மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நலநிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.

ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த...

அதன்படி 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார்.

தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி வருவாய் வரிவசூல் சட்டத்தின் கீழ் அத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நலநிதி தொகையை ஜனவரி 31-ந் தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600 006 என்ற முகவரிக்கு The Secretary, Tamil Nadu Labour Welfare Board, Chennai- 600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலை, காசோலையாக அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை என்று விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


Next Story