கடந்த 1½ மாதமாக 55 அடியில் நீடிக்கும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்
கடந்த 1½ மாதமாக மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.
தேனி
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜூலை மாதம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1½ மாதமாக அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. நீர்வரத்து வினாடிக்கு 90 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story