மாற்றுத்திறனாளிகளுக்குஉயர்த்தப்பட்ட உதவித்தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படும்


மாற்றுத்திறனாளிகளுக்குஉயர்த்தப்பட்ட உதவித்தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படும்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி தேனி மாவட்டத்தில் உள்ள 9,389 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற்று வரும் அனைவரும் ரூ.1,500 இம்மாதம் முதல் பெற்றுக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் தவிர முதியோர் உதவித்தொகை பெறுவோர், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாய கூலிகள், திருநங்கைகள் உதவித்தொகை, திருமணமாகாத முதிர்கன்னி உதவித்தொகை ஆகியோருக்கு வழக்கம் போல் மாதந்தோறும் ரூ.1,000 மட்டும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story