நகராட்சி, பேரூராட்சிகளுக்குதானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரங்கள்:கலெக்டர் வழங்கினார்


நகராட்சி, பேரூராட்சிகளுக்குதானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரங்கள்:கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தானியங்கி எந்திரங்களை வழங்கி பேசினர். அவர் பேசும்போது, 'பாலித்தீன் (நெகிழி) பைகளின் பயன்பாட்டினைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத துணிப்பைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு, தேனி அல்லிநகரம், போடி, கம்பம் ஆகிய நகராட்சிகள் மற்றும் உத்தமபாளைம், ஆண்டிப்பட்டி ஆகிய பேரூராட்சி அலுவலகங்களுக்கு இந்த எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு வருகை தரும் பொதுமக்கள் ரூ.10 செலுத்தி மஞ்சப்பையினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த தானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரம் வழங்கப்பட்டது' என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முரளி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story