பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் நிகழ்ச்சி
பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியை தவக்கால நிகழ்வுகளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு தினமும், சிலுவைப்பாதை, திருப்பலி, ஜெபவழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. பெரம்பலூரில் உள்ள கிறிஸ்தவ மறைவட்ட முதன்மை திருத்தலமான புனித பனிமாதா திருத்தலத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதற்கு முந்தைய தினமான பெரிய வியாழன் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. திருப்பலி, இறைவாக்கு வழிபாடு, சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை வழிபாடு, நற்கருணை பவனி மற்றும் இரவில் நற்கருணை பொது ஆராதனை நடந்தது. இதில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் பாதிரியார் ராஜேஷ் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், கிறிஸ்தவ திருச்சபை அங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story