" நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன" - அமைச்சர் சக்கரபாணி
சென்னையில் பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும், இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சக்கரபாணி ,
அண்ணா நகர், திருவான்மியூரில் 2 குடோன்களில் மட்டும் தண்ணீர் புகுந்துள்ளது; 11 நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பில்லை. நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என தெரிவித்தார்.