செறிவூட்டப்பட்ட அரிசியால் தயாரான உணவு வகைகள்


செறிவூட்டப்பட்ட அரிசியால் தயாரான உணவு வகைகள்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்த உணவு வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்த உணவு வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செறிவூட்டப்பட்ட அரிசி

மத்தியஅரசின் உத்தரவுப்படி செறிவூட்டப்பட்ட அரிசி, அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து உள்ள அச்சத்தை போக்குவதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உணவு வகைகளை சாப்பிட்டு இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், புதினா சாதம், சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது.

ரத்த உற்பத்தி

மேலும் இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 கலந்து தயார் செய்யப்பட்ட அரிசியை அரவை செய்து 1:100 என்ற விகிதத்தில் கலந்து செறிவூட்டப்பட்ட அரிசி தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் ரத்த சோகையை தடுக்கலாம். ரத்த உற்பத்திக்கும், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி உதவுகிறது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு துறை இணை பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.


Next Story