தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் திங்கட்கிழமை மாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஜெயபாக்கியம் வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரையாற்றினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி வழங்குவதை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பணி ஓய்வின் போது பணிக்கொடை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் ஆனந்தசெல்வம், பாஸ்கர், பொன்னரசி, இணை செயலாளர்கள் முருகன், மரியநேசம், மோகனா, வசிஸ்டர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Next Story