கடலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கடலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கடலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு வழங்குவது போல் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 -யை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களிலேயே சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணிதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், தணிகாசலம், ஜெயந்தி, பாலசுந்தரி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குணா தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் கருணாகரன், நிர்வாகிகள் அனுசுயா, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட இணை செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.


Next Story