வேளாங்கண்ணி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு - 75 கிலோ மீன், இறைச்சிகள் பறிமுதல்


வேளாங்கண்ணி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு - 75 கிலோ மீன், இறைச்சிகள் பறிமுதல்
x

வேளாங்கண்ணி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து கெட்டுப்போன 75 கிலோ மீன், இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

வேளாங்கண்ணியில் உள்ள, உணவகங்களில் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உணவகங்களில் தடை செய்யப்பட்ட அதிக கலர் கொண்ட மசாலாவை பயன்படுத்தி, நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட மீன்கள், இறைச்சிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல தரம் குறைந்த மீன்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இந்த ஆய்வின்போது 75 கிலோ மீன், இறைச்சிகள், 20 கிலோ கெட்டுப்போன உயர்தர உணவு பொருள்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டன. அதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டன.

உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறாத கடைகள் வியாபாரம் செய்தால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது பேரூராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story