தென்காசியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை; 25 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்


தென்காசியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை; 25 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sept 2023 5:54 AM IST (Updated: 23 Sept 2023 6:45 AM IST)
t-max-icont-min-icon

சுமார் 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள உணவகங்கள், சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன சுமார் 25 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், யூனியன் அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது தொடர்பாக 5 உணவகங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.




Next Story