ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை


ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் தலைமையில் சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கரன், ஆய்வாளர் சிவா ஆகியோர் அடங்கிய தனிக்குழுவினர் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், யூனியன் அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல், துரித உணவகம், ஷவர்மா கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 5 உணவங்களில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப்போன 25 கிலோ கோழி இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவைகளை பினாயில் ஊற்றி அழித்தனர். 5 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


Next Story