சேலத்தில் உள்ள உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை - தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, சப்பாத்தி மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்,
சேலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, சப்பாத்தி மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
சீலநாயக்கன்பட்டியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, சப்பாத்தி மாவு, பிரியாணி, மசாலா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதனிடையே, மசாலாக்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? ஏன் மாமிசங்கள் முறையாக பதப்படுத்தப்படுவதில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story