பழனி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை


பழனி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 19 Aug 2023 1:15 AM IST (Updated: 19 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

பழனி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை செய்தனர்.

திண்டுக்கல்

பழனி நகரில் உள்ள மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, பூரி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி முரண்பாடாக உள்ளதாக பொதுமக்கள் தொடர் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று, பழனி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் அலுவலர்கள் பழனி திருநகர், நேதாஜி நகரில் உள்ள பல்பொருள் அங்காடி, மளிகை கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த உணவு பொருட்களில் சரியான தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு உள்ளதா? என பார்வையிட்டனர். தொடர்ந்து தயாரிப்பு தேதிகளில் முரண்பாடுகள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் அந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என அறிவுரை வழங்கினர்.


Next Story