ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை


ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 21 Sept 2023 1:15 AM IST (Updated: 21 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

நாமக்கல்லைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவி கலையரசி 'ஷவர்மா' சாப்பிட்டதால் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் ஷவர்மா தயாரித்து விற்பனை செய்யப்படும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கொடைக்கானலில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் ஆகியோர் ஓட்டல்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அதில் 'ஷவர்மா' தயாரித்து விற்பனை செய்யும் ஓட்டல்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது உணவு தயாரிக்கும் தொழிலாளர்களிடம், உணவுகளை சுகாதாரமாக தயாரிக்கவும், பழைய இறைச்சிகளை பயன்படுத்தக்கூடாது என்றும், முழுவதும் வேகவைத்த பின்னரே அதனை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தரமற்ற 'ஷவர்மா' தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. சோதனையின்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story