பக்தர்களுக்கு அன்னதானம்


பக்தர்களுக்கு அன்னதானம்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் சங்கரமடத்தில்பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே உள்ளது ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடம். இந்த ஆண்டின் புரட்டாசி மகாளய பட்சம் கடந்த 29-ந்தேதி தொடங்கியுள்ளது. வருகின்ற 14-ந் தேதி மகாளய அமாவாசையுடன் இந்த மகாளய பட்சம் முடிவடைகின்றது. மகாளய பட்சம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கரமடத்தில் கடந்த 29-ந்தேதியில் இருந்து தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றது. அதுபோல் பித்ரு பூஜை, தர்ப்பண பூஜை உள்ளிட்டவைகளும் நடைபெற்று வருகின்றன. மகாளய பட்சத்தில் 7-வது நாளான நேற்று 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.சங்கர மடத்தின் மேலாளர் ஆடிட்டர் சுந்தர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story