சுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
இரண்டு நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை தலைமை செயலக பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story