ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65ஆயிரம் கன அடியாக குறைந்தது


ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65ஆயிரம் கன அடியாக குறைந்தது
x

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைந்தது உள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக ,கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது குறைந்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ ஆற்றில் இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுறித்தி வருகின்றனர்.

மேலும் நீர் வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுவில் உள்ளமத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பரிசல் இயக்கவும் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.

ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பரிசில் இயக்கவும் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடித்து வந்த போதிலும் இன்று சில பரிசில் ஓட்டிகள் தடையை மீறி இயக்கினர். இதில் சுற்றுலா பயணிகள் எந்த விதமான பாதுகாப்பு உடை அணியாமல் மெயின் அருவி வரை பரிசலில் வந்து சென்றனர்.


Next Story