கடையநல்லூரில் பூக்கள் விலை உயர்வு
கடையநல்லூரில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடையநல்லூர் பூமார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு கடந்த வாரம் 1 கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ நேற்று ரூ.400 உயர்ந்து ரூ.1,100-க்கு விற்பனையானது. இதேபோல் ரூ.700-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ரூ.300 உயர்ந்து ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. அரளிப்பூ ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், ரோஜாப்பூ ரூ.150-க்கும், கேந்திப்பூ ரூ.30-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரி திருமலைச்சாமி கூறுகையில், 'தற்போது தொடர் கோடை மழையால் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. பூக்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகமாக உள்ளது. 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி வெள்ளி என்பதால் பூக்களின் விலை சற்று உயர்வாக உள்ளது. இருந்தபோதிலும் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்' என்றார்.