வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்தது.

கரூர்

கரூரில் கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.1,500-க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.300-க்கும், ரூ.200-க்கு விற்ற சம்பங்கி ரூ.50-க்கும், ரூ.200-க்கு விற்ற அரளி ரூ.130-க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ ரூ.140-க்கும் விற்பனையானது.


Next Story