பெரியாரின் 145-வது பிறந்தநாள் மலர்


பெரியாரின் 145-வது பிறந்தநாள் மலர்
x

பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பிறந்தநாள் மலர் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு மலரை வெளியிட்டார். நிகழ்ச்சியில், துணைப் பொதுச்செயலாளர் இன்பக்கனி, பிரசார செயலாளர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கி.வீரமணி பேசும்போது, 'தி.மு.க. ஆட்சியில் பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என உத்தரவிட்டு அமல்படுத்தியிருகிறார்கள். இதை பார்க்கும் போது பெரியாரின் கனவு நனவாகி வருகிறது என்பதையே காண முடிகிறது. பெண் கடவுளாக இருக்கும் போது பெண் ஏன் அர்ச்சகராக இருக்கக்கூடாது என கேட்டால் சனாதனத்திற்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கென செயல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிக்கிறது. இலவச பஸ் பயணம், சொத்துரிமை என பல்வேறு திட்டங்கள் உள்ளது. பெண்ணிய விடுதலை மேலும் வளர வேண்டும்' என்று கூறினார்.


Next Story