வடிய தொடங்கிய வெள்ள நீர் - கடம்பூர் மலைப்பகுதியில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்
கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கியது.
கடம்பூர்,
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த மழை காரணமாக கடம்பூரை அடுத்த குரும்பூர் மாமரதொட்டி அருகே உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாக்கம்பாளையம் சாலையில் உள்ள இரண்டு காட்டாறுகளிலும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்து தற்போது வெள்ளநீர் வடிந்ததையடுத்து பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.