கொடைக்கானல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு


கொடைக்கானல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 23 Sept 2023 3:00 AM IST (Updated: 23 Sept 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல்

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பெரும்பாறை, கானல்காடு, மஞ்சள்பரப்பு, நல்லூர்காடு, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கல்லக்கிணறு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல வெண்ணிறத்தில் பொங்கி வழியும் தண்ணீர் விழிகளுக்கு விருந்து படைப்பதாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கார், வேன், ஜீப், மோட்டார் சைக்கிளில் வந்து அருவியை பார்த்து ரசிப்பேேதாடு குளித்து மகிழ்கின்றனர்.


Next Story