குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 14 Dec 2022 7:27 PM IST (Updated: 14 Dec 2022 7:28 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே மேகமூட்டமும் பனிமூட்டமும் காணப்பட்டது குளிர்ந்த சூழல் நிலவியது. மெல்லிய சாரல் மழை வெற்றி விட்டு தூறி வந்தது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடம் பெய்தது.

இதைத்தொடர்ந்து மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story