வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்...!


வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்...!
x

தொண்டி பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய கடல் பசு மீண்டும் கடலில் விடப்பட்டது.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடல் பசுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தொண்டி பகுதியிலிருந்து பைபர் படகு ஒன்றில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற இந்த மீனவர்களின் வலையில் அரியவகை கடல்வாழ் உயிரினமான ஆவுலியா என்று சொல்லக்கூடிய கடல் பசு ஒன்று சிக்கியுள்ளது.

வலையில் சிக்கிய அந்த கடல் பசுவை மீனவர்கள் வலையை அறுத்து மீண்டும் கடலில் உயிருடன் விட்டனர். இதனை தொடர்ந்து அந்த கடல் பசுவானது மீண்டும் கடலுக்குள் வேகமாக நீந்தி ஆழ்கடல் பகுதிக்கு சென்றது.

இந்த நிலையில் வலையில் சிக்கும் டால்பின், கடல் பசு, ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை மீண்டும் கடலில் விடும் மீனவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story