கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வலியுறுத்தியும், கடலில் காற்றாலை அமைக்கப்பட்டால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் எஸ்.பி.ராயப்பன், ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், இன்னாசி முத்து, நந்தகிருஷ்ணன், பாரம்பரிய மீனவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சின்னத்தம்பி, பாபு உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும், மீனவ பெண்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story